Wednesday, 20 July 2011

முஹ்யித்தீன் மௌலுதின் சில வரிகள். 1
1 ) நிச்சயமாக நீங்கள் இம்மார்கத்தை உயிர்பித்தவராவீர்! உறுதியாக நீங்கள் அச்சாணியாக திகழ்கிறீர்கள். எல்லா நேரமும் நீங்கள் இரட்சகராக இருக்கிறீர்கள் எனவே நாங்கள் அழிவதை விட்டும் எங்களை காப்பாற்றுங்கள்!
2 ) ஜின்கள் , மனிதர்கள் ஆகிய இரு இனத்தவர்களையும் இரட்சிக்கக்கூடியவர் நீங்களே! மக்கா மதினா ஆகிய புனித நகரங்களுக்கு அலங்காரமாக திகழ்பவர் நீங்களே! வானம் பூமிகளை பிரகாசிக்கச் செய்பாவர் நீங்களே! எங்களை வெற்றி பெற்றவர்களாக ஆக்கி விடுங்கள்.
3 ) அரிதான அற்புதமான நிகழ்ச்சியை நிகழ்த்தக்கூடியவர் நீங்களே! பிறரது உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படையாக அறிவிக்கக்கூடியவர் நீங்களே!
4 ) இறை அச்சம் உடையவர்களிளெல்லாம் அதிக இறை அச்சம் உடையவர் நீங்களே! சிறந்தவர்களிளெல்லாம் மிகக் சிறந்தவர் நீங்களே இறை நேசர்களின் கிரீடமாக நீங்கள் மாறி விட்டிர்கள் எங்களுக்கு தெளிவான வெற்றியை வழங்குங்கள்.
5 ) அப்துல் காதிர் அவர்கள் எத்தகையவார் என்றால் யாரேனும் கஷ்டத்தின் போது அவரை அழைத்தால் அவர் உடனடியாக ஈடேற்றம் பெறுவார்.
6) "அப்துல் காதர் ஜீலானி பிரப்பதக்கு சுமார் நுறு வருடங்களுக்கு முன் "அப்துல் காடர் ஜீலானி அல்லாஹ்வுடைய அவ்லியாக்கள் ஒவ்வொருவரினதும் கழுத்திலும் தமது பாதம் உள்ளது என்று கஊருமாறு கட்டளை இடப்படுவார் " என்று ஒரு பெரியார் இல்ஹாமில் தெரிந்து கஊரினர். அவர் கஊரியது போலவே அப்துல் காதர் ஜீலானி இவ்வுலகில் அதிகாரம் செலுத்திய காலத்தில் 52 அவ்லியாக்கள் அடங்கிய அவையில் அவர் அதை பிரகடனம் செய்தார். அங்கே இருந்த அவ்லியாக்கள் இல்லாத அவ்லியாக்கள் அனைவரும் கட்டுப்பட்டு தங்களது தலையை தாழ்த்தினார்கள். ஆனால் இஸ்பஹான் ஊரை சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் மறுத்தார். இதனால் இவர்ஹது விலாயத் பறிக்கப்பட்டது."

இப்போ ஆணவம் சம்பந்தமாக திருமறையில் அல்லாஹ் என்ன சொல்லுது என்று பார்போம்.

மக்களிடம் உன் முகத்தை திருப்பாதே! பூமியில் ஆணவத்துடன் நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் ஆணவமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் நேசிக்க மாட்டான். (அல் குரான் 31 :18 )

வானங்களிலும் பூமியிலும் பெருமை அல்லாஹ்வுக்கே உரியது. (அல் குரான் 45 :37 )

இறைவனை அஞ்சுபவர்கள் தவிர வேறு எவரும் அவனது அவ்லியாக்கள் அல்லர். (அல் குரான் 8:34 )

இப்படியான வில்லங்கமான விடயங்கலேயே புனிதமாக கருதி அர்த்தம் தெரியாமல் ஓதுகிறோம்.
இல்லை நான் தவறாக எண்ணியுள்ளேன் என்று நீங்கள் எண்ணினால், ஒதுங்கிவிடாமல் உங்கள் மேலான அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment