Wednesday, 20 July 2011

பலபிட்டிய பள்ளி கந்தூரி ஒரு ஆய்வு.

வருடாவருடம் தவறாமல்  பலபிட்டிய பள்ளி வாசலில் சேக் அலாவுத்தீன் அவ்லியா (?) அவர்களை நினைவு கூறியும் அன்னாரின் துஆ பரக்கத்தை பெறவும்  கொண்டாடும் கந்தூரி   சம்பந்தமாக இஸ்லாம் என்ன சொல்லுது என்பது நம்மில் பலர் அறியாமல் இருப்பது வேதனையும் கவலையுமாக உள்ளது .ஆகவே  நான் அறிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.

நிறைவுகள் இருப்பின் அல்லாஹ்வுக்கே அப்புகலனைத்தும், தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுவது உங்கள் மீதுள்ள கடமை என்றும் என் கருத்தை ஆரம்பிக்கின்றேன்.
(முஹ்மீன்களே !) அறிந்து கொள்ளுங்கள் : நிச்சயம்மாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பய பக்தியுடன் நடந்து கொள்வார்கள். (அல் குர்ஆன் 10 :62 ,63 )

அவ்லியாகளின் நிலைமையினை எமக்கு அறிவித்த அல்லாஹ் அவ்லியாக்கள் யார் என்பதை இவ்வாறு கூருகிறான்.

(நபியே! நீர் கூறும் "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்கலானால் என்னை பின்பற்றுங்கள்: அல்லாஹ் உங்களை நேசிப்பான் . உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் இருக்கிறான். (அல் குர்ஆன் 3 :31 )

இந்த வசனத்தின் படி நபியை பின்பற்றுவார்களே அவ்லியாக்கள் என்பதை உணரலாம்.
எனவே இந்த நிலைமையினை அடைவதற்கே எல்லாரும் முயற்ச்சிக்க வேண்டும்.
ஆனால் இன்று சமுதாயத்தில் அவ்லியாக்கள் என்று சற்று வித்தியாசமாகவே கணிக்கப்படுகின்றனர்.
மறுமையில் நமது நிலைமையையோ நமது தாய் தகப்பன்மார்களின் நிலைமையையோ அறியாமல் இருக்க. நாம் முன்ன பின்ன காணாத ஒருவருக்கு அவ்லியாஹ் என்ற பதவி கொடுத்து அவர்களின் சமாதிகளில் நேரடியாகவும் பொறுத்தாலும் துஆ கேட்கின்றனர்.

இறைவா! எனது மண்ணறையை வணங்கப்படும் இடமாக ஆக்கிவிடாதே! என்பது நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை. அறிவிப்பவர் அபுஹுரைராஹ் (ரலி) நுல் முஅத்தா

நபிகாளின் மன்னரையே அவர்கள் வணங்க கூடாது என்றிருக்க இவர்களின் கதி என்ன?
நாங்கள் இரண்டு விட்ட நல்லடியார்களைத்தான் அழைக்கின்றோம் என சிலர் வாதாடலாம்.
இவர்கள் நல்லடியார்களா என்பது ஒருபுறம் இருக்க, அப்படி நல்லடியார்களை அழைக்கலாமா?
இறைத்தூதர் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்போம்.

யூத கிறிஸ்தவர்கள் தங்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விடும் போது அவரது ஒரு கப்ரின் மீது ஒரு வணக்கஸ்தலத்தை கட்டி கொள்வர். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்து கொள்வார்கள். மறுமையில் அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள்.
அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) நூல் புகாரி
.

மேலும் நீங்கள் எனது கப்ரை விழாக் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதிர்கள் என்பது நபி மொழி.
அறிவிப்பாளர்.ஆபுஹுரைரா (ரலி) நூல்: அஹ்மத் ஆபுதாவுத்
 நபிகளாரின் கப்ருக்கே விழாக் கொண்டாட அனுமதிக்க கூடாது என்று தடை விதிக்க பிறரது கப்ருக்கு விழா கொண்டாடலாமா? உண்மையிலே அலாவுத்தீன்  அவர்கள் அவ்லியாவாக இருந்தால் இது நாம் அவரை மதிக்கும் விதமா அவமதிக்கும் விதமா?

மண்ணறைகளை உயர்த்தி கட்டுவதக்கும் இஸ்லாம் அனுமதிக்க வில்லை,
அப்படியாயின் இங்கு அடக்கமே செய்யாமல் பலகையினால் ஒரு கூடி கட்டி அவரிடம் பிரார்த்திகிரீர்களே இது எந்த பாவத்தில் சேரும்.
சிலர் நாம் அவர்களிடம் துஆ கேட்பதில்லையே என்று வாதாடலாம். இது வெறும் பொய்யே.
உதாரணமாக எமது கந்தூரியில் "ரில்வானு ரப்பினால் முகைமினுள்" என்று தொடங்கும் பைத்தின் ஒரு வரியின் கருத்து இப்படி.
"வெளித்துறை குடி முஸ்லிம்கள் வாழவே பேரருள் செய்வாய் பெரியோனே யாஸலாம்."

இது துஆ இல்லையா சஹோதரர்களே.

‎"ஒரு செம்பு கடலில் மிதந்து வந்ததாம் அதை சிங்களவன் எடுக்க சென்றதும் அது தூர சென்றதாம் நம்மடவங்க போனதும் கிட்ட வந்ததாம் " இதுவே இந்த கந்தூரியின் ஆரம்பம் என நினைக்கிறேன். இந்த செம்பினை ஒருவர் வீட்டில் வைத்துக் கொண்டு வருடாந்தோரும் அச்செம்புக...்கு செய்யும் பூஜையே இக்கந்தூரி.

யார் அல்லாஹ் அல்லாதவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டிருக்கிரார்க​ளோ அவர்கள் எங்களை அல்லாஹ்விடம் சமீபா மாக்கிவைப்பார்கள் என்பதக்காவேயன்ரி நாங்கள் வணங்க வில்லை என்று கூருகின்றனர். (அல் குர்ஆன் 39 :3 )

கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின் மீது எழுதப்படுவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப் படுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அறிவிப்பாளர்; ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் ,திர்மிதி

எனவே மேற்படி காரியங்களுக்கு பணத்தாலோ, பொருளாலோ ,உடம்பாலோ, மனசாலோ உதவி செய்வார்களாயின் நாளை மறுமையில் உங்களின் நிலையினை சற்று சிந்தித்து பாருங்கள்.
இல்ல இது சரியா பிழையா என குழப்பம் இருப்பின் பின்வரும் குர் ஆன் ஆயத்து படி நடந்து கொள்ளுங்கள்

"எதை பற்றி உமக்கு (த் தீர்க்க) யானம் இல்லையோ அதை(ச்செய்ய )த் தொடர வேண்டாம்." (அல் குரான்)
 
இவை தவறு என்று உணருவதக்கு மேலும் பல ஆதாரங்கள்

1 ) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதக்கு ஈமான் கொண்டுள்ள எந்தவொரு ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமை இல்லை.ஆகவே அல்லாஹ...்வுக்கும் அவனது தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமாக வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். (அல் குர்ஆன் 33 :36 )

2 ) யாராவது நாம் சம்பந்தப்படாத ஒன்றை (மார்க்கமாக்கி)ச் செயற்படுத்தினால் அது மறுக்கப்படும். என்று நபி (ஸல்) அவர்கள் கூரியுள்ளார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) நூல் : புகாரி

3 ) எதை பற்றி உமக்கு (த் தீர்க்க) யானம் இல்லையோ அதை(ச்செய்ய )த் தொடர வேண்டாம்.(அல் குர்ஆன் 17 : 36 )

4 ) யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களது நபிமார்களின் மண்ணறைகளை வணங்குமிடங்களாக ஆக்கி விட்டார்கள். அறிவிப்பவர்; அபூஹுரைரா நூல் : முஸ்லிம்

5 ) தரை மட்டத்திக்கு மேல் உயரமாகக் கட்டப்பட்ட எந்த கப்ரையும் தரை மட்டமாக்காது விட்டுவிடாதே!" என்று நபி (ஸல்) அவர்கள் என்னை பணித்தார்கள். அதே பணியைச் செய்து வர உன்னை நான் அனுப்பி வைக்கிறேன் என்று அபுல் ஹையாஜ் என்பவரை நோக்கி அலி (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்

6 ) அல்லாஹ்வையன்றி யாரை இவர்கள் அழைக்கின்றார்களோ அவர்களால்எந்த பொருளையும் படைக்க முடியாது. மாறாக அவர்களே படைக்கப் பட்டவர்கள்தாம். அவர்கள் இறந்தவர்களே, உயிருள்ளவர்கள் அல்லர். மேலும் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியார். (அல் குர்ஆன் 16 :20 ,21 )
 
‎7 ) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக வரம்பு மீறியவர்களை அவன் நேசிப்பதில்லை (அல் குர்ஆன் 7 :55 )

மேலும் இந்த கந்தூரியின் முக்கியஸ்த்தவர்களின்  வாழ்க்கையை சிறிது அலசி பார்ப்பின் அவர்களிடம் தொழுகை,நோன்பு(?), ஷக்காத் ஹஜ்ஜு போன்ற அடிப்படை அமல்கள் ஒரு துளியுமே இருக்காது! இவர்களின் முழு விசுவாசம் எல்லாம் இவர்களை அந்த அவுலியாக்கள் கரை சேர்த்து விடும் என்பதே!

எனவே அன்றைய தினம் கடை தெருவுக்கு செல்வதோ , சாப்பிட செல்வதோ, கிடுகு வாங்குவதோ எவையெல்லாம் இவற்றை ஊக்கு விக்குதோ அவற்றில் இருந்து தூரவாகி உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

மேல் சொன்ன வற்றில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும், திருத்திக்கொள்ள நான் தயார்.
ஏனெனில் இஸ்லாத்தை தூய வடிவில் பின்பற்றி எம்மை இறைவன் இப்பூமிக்கு அனுப்பிய இலக்கை அடைவதே எனது இலக்கு. அதுவே உங்களுடையதும் என நினைக்கிறேன்.வஸ்ஸலாம்..

No comments:

Post a Comment